3 அமைச்சர்களின் சில துறைகள் மாற்றியமைப்பு; புதிதாக இயற்கை வளத்துறை உருவாக்கம் – தமிழக அரசு


தமிழக அமைச்சரவை இலாக்காக்களை நிர்வாக ரீதியாக மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் சர்க்கரை ஆலைகள் , தொழில் துறை அமைச்சரிடம் இருந்து இருந்து வேளாண் துறை அமைச்சருக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, விமான போக்குவரத்து துறை, போக்குவரத்து துறை அமைச்சரிடம் இருந்து தொழில்துறை அமைச்சருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், அயலக பணியாளர் கழகம் சிறுபான்மை நலத்துறை அமைச்சரிடம் இருந்து தொழிலாளர் நலத்துறை அமைச்சருக்கு மாற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசில் புதிய துறையாக இயற்கை வளத்துறை உருவாக்கப்பட்டுள்ளது. புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநரகம், தமிழ்நாடு கனிமவள நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனம் ஆகியவை இயற்கை வளத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படுகின்றது. துறைக்குத் தேவையான விதிகள் மற்றும் அறிவுறுத்தல்கள் மனைதவளத்துறையிடமிருந்து வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COMSource link

Leave a Reply

%d bloggers like this: