விலகிய அமைச்சருக்கு எதிராகக் கைது வாரண்ட்; மேலும் ஒரு அமைச்சர் ராஜினாமா! – என்ன நடக்கிறது உ.பி-யில்? | Another minister resigns in Uttar Pradesh: Chief Minister Yogi Adityanath shocked

உத்தரப்பிரதேச சட்டமன்றத்துக்கு அடுத்த மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் பா.ஜ.க-வுக்கும், சமாஜ்வாடி கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. நாட்டின் மிகப்பெரிய மாநிலமாகக் கருதப்படும் உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தல், 2024-ம் ஆண்டு நடக்க இருக்கும் மக்களவை தேர்தலுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இதனால் இந்தத் தேர்தலில் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள பா.ஜ.க முனைப்புக் காட்டி வருகிறது. ஆனால், பா.ஜ.க-வைச் சேர்ந்த அமைச்சர்களும், எம்.எல்.ஏ-க்களும் அடுத்தடுத்து கட்சியிலிருந்து வெளியேறிக்கொண்டிருக்கின்றனர். ஏற்கெனவே, அமைச்சர் சுவாமி பிரசாத் மவுரியா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அவர் சமாஜ்வாடி கட்சியில் சேருகிறார்.

ஆனாலும், தனது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து வெள்ளிக்கிழமை தெரிவிப்பேன் என்றும், தன்னுடன் பா.ஜ.க-வில் இருந்து மேலும் சில எம்.எல்.ஏ-க்கள் வெளியேறுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் சுவாமி பிரசாத் மவுரியாவுடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு இருந்தார்.

யோகி ஆதித்யநாத்

யோகி ஆதித்யநாத்

இந்தப் புகைப்படம் வெளியானதைத் தொடர்ந்து மவுரியாவுக்கு எதிராக உ.பி அரசு தரப்பில் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2014-ம் ஆண்டு மவுரியா இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் பேசியதாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. அப்போது மவுரியா பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்தார். கடந்த தேர்தலில் தான் அவர் பா.ஜ.க-வுக்கு வந்தார். இப்போது மவுரியா மீண்டும் பா.ஜ.க-வுக்கு வர வாய்ப்பு இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருப்பதால், அவர் மீது 2014-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் கோர்ட்டில் ஆஜராகவேண்டும் என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்றொரு புறம் மவுரியாவை சமாதானப்படுத்தும் வேலைகளும் பா.ஜ.க தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே மவுரியா உட்பட 4 எம்.எல்.ஏ-க்கள் பா.ஜ.க-விலிருந்து விலகிவிட்டனர். இந்த நிலையில், புதிய திருப்பமாக மற்றொரு அமைச்சரும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தாராசிங் சவுகான் என்ற அந்த அமைச்சர் பிற்படுத்தப்பட்ட சமுதாய தலைவர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

Source link
www.vikatan.com
https%3A%2F%2Fwww.vikatan.com%2Fgovernment-and-politics%2Fpolitics%2Fanother-minister-resigns-in-uttar-pradesh-chief-minister-yogi-adityanath-shocked
https://www.vikatan.com/government-and-politics/politics/another-minister-resigns-in-uttar-pradesh-chief-minister-yogi-adityanath-shocked

Leave a Reply

%d bloggers like this: