`பெண்ணிடம் பிறந்த வீட்டில் பணம் கேட்கச் சொல்வதும் வரதட்சணையே!’ – உச்ச நீதிமன்றம் | forcing wife to get money from her house is also dowry says supreme court


“ஒரு பெண்ணை முன்னிறுத்திக் கேட்கப்படும் சொத்து உள்ளிட்ட எந்த மதிப்புமிக்க பொருள்களுமே வரதட்சணையின் கீழே வரும். சொத்து, பணம், வீடு கட்ட தொகை கேட்பது என இவை உள்ளிட்ட அனைத்து நிதி தொடர்பான விஷயங்களும் அதில் அடங்கும். எனவே `வரதட்சணை’ என்ற வார்த்தைக்கு விரிவான சட்ட விளக்கம் கொடுக்கப்பட வேண்டும்” என்று உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் என்.வி. ரமணா, ஏ.எஸ். போபண்ணா மற்றும் ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய அமர்வு வரதட்சணை வழக்கு ஒன்றின் தீர்ப்பில், சமூகக் கொடுமையான வரதட்சணையை வேரோடு பிடுங்கும் வகையில் அதற்கு எதிரான சட்டப்பிரிவில் விளக்கம் தரப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

Court (Representational Image)

Court (Representational Image)
Image by miami car accident lawyers from Pixabay

“இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 304(பி)இன் கீழ் வழக்குகளைக் கையாளும்போது , வரதட்சணைக் கோரிக்கைகள் என்ற கொடூரமான குற்றத்தைத் தடுக்கும் வகையில், அவ்வழக்குகளில் நீதிமன்றத்தின் அணுகுமுறை இருக்க வேண்டும்” என்று நீதிபதி கோஹ்லி, அந்த அமர்வுக்கான தீர்ப்பில் குறிப்பிட்டார்.

மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம், வரதட்சணையால் உயிரிழந்த பெண்ணின் வழக்கு ஒன்றில், “அந்தப் பெண்ணேதான் தன் பெற்றோரிடமிருந்து வீடு கட்டப் பணம் கேட்டுப் பெற்றிருக்கிறார், இதை வரதட்சணையாகக் கருதமுடியாது” என்று கூறி, அந்தப் பெண்ணின் கணவர் மற்றும் மாமனாரை விடுதலை செய்திருந்தது. அந்தத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து, வரதட்சணை குறித்து மேற்சொன்ன விளக்கத்தை அறிவுறுத்தியுள்ளது.Source link

Leave a Reply

%d bloggers like this: