நெல்லை: அரசு ஒப்பந்தகாரர் எனக்கூறி நண்பரிடமே லட்சக்கணக்கில் மோசடி செய்ததாக இருவர் கைது


நெல்லை மாவட்டம் பணகுடி அருகே அரசு ஒப்பந்ததாரர் எனக்கூறி நண்பனிடம் பல லட்சம் மோசடி செய்ததாக இருவர், காவல்துறையினரால் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள காவல்கிணற்றை சேர்ந்தவர் எட்வின்தாஸ். இவர் வெளிநாட்டில் அச்சு கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய பள்ளி நண்பர்கள் வடக்கன்குளத்தை சேர்ந்த வெங்கடேஷ் லால் மற்றும் குமரேசன் லால். இவர்கள் இருவரும் அரியலூரில் அரசு ஒப்பந்ததாரராக உள்ளதாகவும் அங்கு கட்டிட பணிகள் நடைபெற்று வருவதாகவும் அதற்கு முதல் கட்டமாக 28 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது என்றும் எட்வின் தாஸிடம் கூறியுள்ளனர். அந்தப் பணத்தை 2 மாதத்தில் திருப்பி தந்து விடுவதாக கூறி வங்கி மூலம் கடன் பெற்றுள்ளனர்.

image

ஆனால் 2 மாதங்கள் கடந்தும் பணம் திருப்பி கொடுக்கவில்லை என்றும், போன் செய்தால் போனை எடுப்பதில்லை என கூறப்படுகிறது. இதனால் எட்வின்தாஸ் இதுகுறித்து நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் பணகுடி போலீசார் மோசடி, மிரட்டல் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து வெங்கடேஷ் லால் மற்றும் குமரேசன் லால் இருவரையும் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி: மதுரவாயல்: லாரி ஏறி தந்தை கண்முன்னே இரண்டு மகன்களும் உயிரிழந்த பரிதாபம்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COMSource link

Leave a Reply

%d bloggers like this: