தை பிறந்தால் வழி பிறக்கும்… தமிழில் பேசிய மோடி; நீட் குறித்து கோரிக்கை வைத்த ஸ்டாலின்! | PM Modi inaugurates 11 medical colleges in Tamil Nadu

தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

தமிழ்நாட்டில் ரூ.4,000 கோடி மதிப்பீட்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் அதாவது, நாமக்கல், விருதுநகர், திருப்பூர், நீலகிரி, நாகப்பட்டினம், திருவள்ளூர், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, அரியலூர், ராமநாதபுரம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் அரசு கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. புதிய மருத்துவக்கல்லூரிகள் மூலம் கூடுதலாக 1,450 இடங்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மோடி

மோடி
Jeff J Mitchell/Pool Photo via AP

கல்லூரிகளை திறந்துவைத்து பின்பு பிரதமர் மோடி, “தை பிறந்தால் வழி பிறக்கும்” எனத் தமிழில் பேசி உரையைத் தொடங்கினார். மேலும் பிரதமர் மோடி சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தையும் காணொலி மூலம் திறந்து வைத்தார். தாய்மொழிக் கல்வியைத் தான் அரசு ஊக்குவிக்கிறது என்றும் தேசிய கல்விக் கொள்கையில் தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்றும், தமிழ் சார்ந்த படிப்புகளில் செம்மொழித் தமிழ் மத்திய நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் அவர் கூறினார்.

Source link
www.vikatan.com
https%3A%2F%2Fwww.vikatan.com%2Fgovernment-and-politics%2Fpolitics%2Fpm-modi-inaugurates-11-medical-colleges-in-tamil-nadu
https://www.vikatan.com/government-and-politics/politics/pm-modi-inaugurates-11-medical-colleges-in-tamil-nadu

Leave a Reply

%d bloggers like this: