திருவள்ளுவர் சிலைக்கு14ல் மாலை அணிவிப்பு| Dinamalar

பெங்களூரு : பொங்கல் பண்டிகை ஒட்டி பெங்களூரு தமிழ் சங்கம் சார்பில் வரும் 14ல் ஹலசூரு ஏரிக்கரையில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக்கப்படுகிறது.பெங்களூரு தமிழ் சங்க தலைவர் தாமோதரன், செயலர் சம்பத் வெளியிட்ட அறிக்கை:பெங்களூரு தமிழ் சங்கம் சார்பில், தை முதல் நாளாகிய பொங்கல் விழா நாளில் (14 ல்) காலை 8.30 மணி அளவில் ஹலசூரு ஏரிக்கரையில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து சிறப்பு செய்யப்படுகிறது.இந்நிகழ்ச்சியில், சங்க செயற்குழு உறுப்பினர்கள், சங்க வாழ்நாள் உறுப்பினர்கள், பிற தமிழ் அமைப்பினர் ஜாதி, மதம், இனம் கடந்து பங்கேற்கு வேண்டுகிறோம்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Source link
www.dinamalar.com
https%3A%2F%2Fwww.dinamalar.com%2Fnews_detail.asp%3Fid%3D2935847
https://www.dinamalar.com/news_detail.asp?id=2935847

Leave a Reply

%d bloggers like this: