தமிழக அரசுத்துறையில் புதிதாக உருவாக்கப்படுகிறது இயற்கை வளத்துறை

தமிழ்நாட்டில் பல்வேறு அரசுத்துறைகள் உள்ள நிலையில் புதிய துறையாக இயற்கை வளத்துறை உருவாக்குவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
தொழில்துறை துறைச் செயலாளரால் நிர்வகிக்கப்பட்டு வரும் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் பிரிவை பிரிப்பதற்கு அரசு முடிவெடுத்துள்ளது. புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநரகம், தமிழ்நாடு கனிமவள நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனம் ஆகியவை இயற்கை வளத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
துறைக்குத் தேவையான விதிகள் மற்றும் அறிவுறுத்தல்கள் மனைதவளத்துறையிடமிருந்து வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Source link
puthiyathalaimurai.com
http%3A%2F%2Fputhiyathalaimurai.com%2Fnewsview%2F126981%2FGovernment-of-Tamil-Nadu-introduces-Natural-Resources-Department-in-TN-govt-departments-list.html
http://puthiyathalaimurai.com/newsview/126981/Government-of-Tamil-Nadu-introduces-Natural-Resources-Department-in-TN-govt-departments-list.html

Leave a Reply

%d bloggers like this: