Adsterra

’26 / 11′.The world-shaking Mumbai attack: Justice not available for 13 years-’26/11′.உலகை உலுக்கிய மும்பை தாக்குதல்:13 ஆண்டுகள் ஆகியும் கிடைக்காத நீதி

1993-ம் ஆண்டு தாவூத் இப்ராகிம் பாகிஸ்தான் துணையுடன் மும்பையில் நடத்திய தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்கு அடுத்தபடியாக மும்பையில் நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதலாக 2008-ம் ஆண்டு தாக்குதல் கருதப்படுகிறது. 2008-ம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதலில் அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகளை நாடுகளை சேர்ந்த 25 பேர் உயிரிழந்தனர். உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கவேண்டும் என்ற நோக்கில் நடத்தப்பட்ட இத்தாக்குதல் சம்பவத்தால் மத்திய உள்துறை அமைச்சர் சிவ்ராஜ் பாட்டீல், மகாராஷ்டிரா முதல்வர் விலாஸ்ராவ்தேவ் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

இத்தீவிரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காரணமான லஷ்கர் இ தொய்பா தலைவர்கள் இன்னும் பாகிஸ்தானில் சுதந்திரமாக இருக்கினர். அவர்களை நீதியின் முன் நிறுத்த பாகிஸ்தான் அரசு இன்னும் முன் வரவில்லை. தீவிரவாதிகளுக்கு தொழில் நுட்ப ஆதரவு கொடுத்து தாக்குதலை நடத்த உதவியது பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்பு. அதனை நிரூபிக்கும் வகையில் தீவிரவாதிகளின் தாக்குதல் இருந்தது.

தமிழ்செல்வம்

தமிழ்செல்வம்

இது குறித்து அப்போது அமைச்சரவை கூட்டத்தில் பேசிய முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக், “தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் ராணுவ தாக்குதல் போன்று இருந்தது. தீவிரவாதிகள் மும்பையில் தாக்குதல் நடத்தக்கூடும் என்று மட்டும் உளவுத்துறை தெரிவித்திருந்தது. எப்போது என்பது தொடர்பாக குறிப்பிட்டு சொல்லவில்லை. 1993-ம் ஆண்டில் இருந்தே மும்பை தீவிரவாதிகளின் தாக்குதல் அச்சத்தில் இருந்து வருகிறது” என்று தெரிவித்தார்.

இத்தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு மகாராஷ்டிராவில் தனி தீவிரவாத தடுப்பு படை அமைக்கப்பட்டது. மும்பை முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இத்தீவிரவாத தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு மகாராஷ்டிராவில் உள்துறை செயலாளராக பதவியேற்ற சந்திரா ஐயங்கார் இது குறித்து கூறுகையில், “இத்தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகள் பாதுகாப்பு முக்கியம் என்பதை உணர்ந்து கொண்டனர். மும்பை தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு போர்ஸ் ஒன் படை உருவாக்கப்பட்டதோடு பாதுகாப்பை பலப்படுத்த பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது” என்று தெரிவித்தார்.

இத்தாக்குதல் சம்பவத்திற்கு மும்பை தீவிரவாதிகளின் எந்தவிதமான தாக்குதலையும் இதுவரை சந்திக்கவில்லை. இத்தாக்குதல் சம்பவத்தின்போது, இப்போது மும்பையில் எம்.எல்.ஏ.வாக இருக்கும் தமிழ்செல்வம் தீவிரவாத தாக்குதலில் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார். அவரிடம் இது குறித்து கேட்டதற்கு, “எனக்கு சி.எஸ்.டி.ரயில் நிலையத்தில் சரக்கு ஏற்றி அனுப்பும் பணி நடந்து வருகிறது. நான் கடைசி ரயிலில் சரக்குகளை ஏற்றி அனுப்பி விட்டு ஊழியரகளுக்கு சம்பளம் கொடுத்துக்கொண்டிருந்த போது ரயில் நிலையத்தின் முன்பகுதியில் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. பயணிகள் கூச்சலிட்டபடி உயிரைக்காப்பாற்றிக்கொள்ள ஓடினர். நானும் எனது ஊழியர்களும் உயிரைப்பற்றிக்கவலைப்படாமல் தாக்குதலில் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தோம்” என்று கூறினார். மகாராஷ்டிராவில் உள்ள ஒரே தமிழ் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்செல்வம் ஆவார்.

Source link

Leave a Reply

Adsterra
%d bloggers like this: