Adsterra

வீட்டுத்தோட்டத்திற்கான அடிப்படை என்ன? மரபு விதைகளை எப்படிப் பயன்படுத்துவது? வழிகாட்டும் பயிற்சி | nanayam vikatan training on how to grow native seed in home garden

மேலும் பேசிய அவர், “இதுமாதிரி, கெங்கேரி கத்திரி, பப்பில் பீர்க்கன் மாதிரியான பல ரக காய்கறி விதைகள் என்கிட்ட இருக்கு. நம்ம வீட்டு தோட்டத்துல அழகுக்காகப் பல்வேறு செடிகளை வளர்க்கிறோம். அதிக விலை கொடுத்து அந்த மாதிரி செடிகளை வைப்பதற்கு பதிலா உணவு, மருத்துவம் இரண்டுக்கும் பயன்படுற மாதிரி பாரம்பர்ய விதைகளை நடவு செய்யலாம்.

அது மூலமா சுவையான, ஆரோக்கியமான உணவும் கிடைக்கும். காய்ச்சல், வயிற்றுவலி, தலைவலி மாதிரியான சின்னச் சின்ன உடல் உபாதைகளுக்கான மருத்துவ மூலிகைகளும் கிடைக்கும். இன்னிக்கு வீட்டுத்தோட்டம் அமைக்கப் பலரும் ஆசைப்படுறாங்க. ஆனால் பேருக்கு மாடி தோட்டம் போட்டுட்டு, கொஞ்ச நாள்ல ஒரு வெறுப்புல விட்டுட்டு போயிடுறாங்க. ஆனால், ஒரு மாடித்தோட்டத்தை எப்படி அமைக்கணும். அதைத் தொடர்ந்து எப்படி பராமரிக்கணும். அதுல நம்ம ஆர்வம் தொடர்ந்து இருக்கிறதுக்கு என்ன செய்யணும். இது மாதிரியான விஷயங்களைத் தெரிஞ்சிக்கணும்.

நேரலை பயிற்சி

நேரலை பயிற்சி

அதுதான் ரொம்ப முக்கியம். வீட்டுத்தோட்டத்திற்கான அடிப்படை என்ன? அதில் மரபு விதைகளை எப்படிப் பயன்படுத்துவது? மாதிரியான விஷயங்களை உங்களோடு நான் பகிர்ந்துக்கப் போறேன். வரும் திங்கட்கிழமை ஆன்லைன் மூலமா உங்களோட பேசப்போறேன்” என்றார்.

நவம்பர் 29-ம் தேதி, திங்கட்கிழமை மாலை 5.30 மணி முதல் 6.30 மணிவரை நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் நீங்களும் கலந்துகொள்ளலாம். நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முன்பதிவு அவசியம். கீழே உள்ள இணைப்பின் மூலம் உங்கள் பெயரைப் பதிவு செய்யுங்கள்.

பயிற்சி கட்டணம்: ரூ.100.

முன்பதிவுக்கு https://events.vikatan.com/323-home-gardening/

Source link

Leave a Reply

Adsterra
%d bloggers like this: