Adsterra

மார்ச் முதல் மஹா.,வில் பா.ஜ., ஆட்சி: மத்திய அமைச்சர் நம்பிக்கை| Dinamalar


புதுடில்லி: ‘வரும் மாதத்தில் மஹாராஷ்டிராவில் பா.ஜ., ஆட்சி அமைக்கும்,’ என மத்திய அமைச்சர் நாராயண் ரானே கூறியிருப்பது அம்மாநில அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

மஹாராஷ்டிராவில் பா.ஜ., – சிவசேனா கூட்டணி கடந்த 2019 சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு பா.ஜ., 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. ஆனால், ஆட்சியில் சமபங்கு, சுழற்சி முறையில் இரண்டரை ஆண்டுகளுக்கு முதல்வர் பதவி கேட்டு சிவசேனா போர்க்கொடி தூக்கியது. இதற்கு பா.ஜ., மறுப்பு தெரிவிக்கவே, கூட்டணியை முறித்துக்கொண்ட சிவசேனா, எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையில் ஆட்சி அமைத்தது.

latest tamil news

ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்தே, இந்த கூட்டாட்சி நிலைக்காது என பலரும் கருத்து தெரிவித்த நிலையில், உத்தவ் தாக்கரே கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் ஆட்சி நடத்தியுள்ளார். இந்நிலையில், மத்திய அமைச்சர் நாராயண் ரானே தெரிவித்துள்ள கருத்து மீண்டும் மஹா.,வில் அரசியல் புயலை கிளப்பியுள்ளது. ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ‘மஹாராஷ்டிராவில் மார்ச் மாதத்தில் பா.ஜ., ஆட்சி அமைக்கும். மாற்றத்தை பார்ப்பீர்கள்,’ எனக் கூறியுள்ளார்.

Advertisement



Source link

Leave a Reply

Adsterra
%d bloggers like this: