Adsterra

மணக்குள விநாயகர் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா| Dinamalar

புதுச்சேரி-மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரியில், பொறியியல் மாணவர்களுக்கான 2021-22ம் கல்வியாண்டுக்கான முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா நடந்தது.மணக்குள விநாயகா கல்வி அறக்கட்டளை தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ., சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி கேசவன் வாழத்தி பேசினார். கல்லுாரி இயக்குனர் வெங்கடாசலபதி வரவேற்றார்.சென்னை டி.சி.எஸ்., நிறுவனத்தை சேர்ந்த ஷீத்தல் ராஜானி, பசிலியா கிளிட்டோஸ் பால், தொழில் ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி, விக்னேஷ், புதுச்சேரி ஈடன் பவர் கோலட்டி பிரைவெட் லிமிடெட் ஜெயக்குமார் ஆன்டனி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.இதில், கல்லுாரி பதிவாளர் அப்பாஸ் மொய்தீன், மணக்குள விநாயகர் இன்ஸ்ட்டியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லுாரி முதல்வர் முலர்க்கண், தேர்வு கட்டுப்பாட்டாளர் ஜெயக்குமார், அகாடமிக் டீன் அன்புமலர், ஆராய்ச்சி துறை டீன் வேல்முருகன், வேலைவாய்ப்புத்துறை அதிகாரி கைலாசம், கலை மற்றும் அறிவியல் கல்லுாரி டீன் முத்துலட்சுமி, அலைட் ஹெல்த் சயின்ஸ் டீன் கோபால் உள்ளிட்ட கல்லுாரியின் அனைத்து துறைத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.முனைவர் அப்பாஸ் மொய்தீன் நன்றி கூறினார்.

Advertisement

Source link

Leave a Reply

Adsterra
%d bloggers like this: