Adsterra

நம்பிக்கை விதைத்த அரசு| Dinamalar

நம்பிக்கை விதைத்த அரசு!
சாமானிய மக்கள் மத்தியில், பிரதமர் மோடியின் அரசு நம்பிக்கையை விதைத்துள்ளது, ஊழல் மற்றும் மாபியா கும்பல்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. காங்., ஆட்சிக் காலத்தில் இருந்த ஊழல், கமிஷன் ஆகியவை தற்போது தடுக்கப்பட்டு உள்ளன.
முக்தார் அப்பாஸ் நக்வி
மத்திய அமைச்சர், பா.ஜ.,
மீண்டும் பா.ஜ., ஆட்சி!
அனைத்து சமூக மக்களின் ஆதரவும், பா.ஜ.,வுக்கு முழுமையாக உள்ளது. உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் சட்டசபை தேர்தலில், பா.ஜ., அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். முன்பைவிட அதிக இடங்களில் வெல்லும்.
ஜிதின் பிரசாதா
உ.பி., அமைச்சர், பா.ஜ.,
சட்டம் இயற்ற வேண்டும்!
ராஜஸ்தான் அமைச்சர் ராஜேந்திர சிங், பெண்கள் குறித்து ஆபாசமாக பேசி வருகிறார். இதுபோல இனி யாரும் பேசக்கூடாது. அப்படி பேசும் நபர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க, பார்லிமென்ட் மற்றும் சட்டசபைகளில் சட்டம் இயற்றப்பட வேண்டும்.
பிருந்தா காரத்
மூத்த தலைவர், மார்க்சிஸ்ட்

Advertisement

Source link

Leave a Reply

Adsterra
%d bloggers like this: