Adsterra

`தை பிறந்தால் வழி பிறக்கும்!’ – சசிகலாவுக்காகக் காய் நகர்த்துகிறாரா சோ.அய்யர்? |former state election commissioner cho aiyar trying to unite sasikala with admk


டிசம்பர் 1-ம் தேதி கட்சியின் செயற்குழு கூடவிருக்கும் நிலையில், வழிகாட்டுதல் குழுவின் எண்ணிக்கையை 11-லிருந்து 18-ஆக உயர்த்த கோரிக்கை வலுத்திருக்கிறது. ‘கட்சிக்கு இரட்டைத் தலைமை முறை வேலைக்கு ஆகாது’ என்கிற முடிவில் சில நிர்வாகிகள் உறுதியாக இருந்து வருகின்றனர். முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் சிலர் ஒன்று சேர்ந்து விரைவில் கூட்டம் ஒன்றைச் சென்னையில் நடத்தவிருக்கிறார்கள். அதில், ‘கட்சியை வழிநடத்த ஒற்றைத் தலைமைதான் வேண்டும். இப்போதிருக்கும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் சிஸ்டத்தை நீக்க வேண்டும்’ என்று தீர்மானமும் இயற்றவிருக்கிறார்கள். இதுபோன்ற செய்திகள் கட்சிக்குள் அனலைக் கிளப்பியிருக்கும் நிலையில், ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்று அய்யர் புதிர் போட்டிருப்பது வெப்பத்தைக் கூட்டியிருக்கிறது” என்றனர்.

இதுகுறித்து விளக்கம் கேட்க சோ.அய்யர் தரப்பிடம் பேசினோம். “பணியிலிருந்து ஓய்வு பெற்றதிலிருந்து அமைதியாகப் பொழுதைக் கழிக்கிறார் அய்யர். ஜெயலலிதா மீது அவருக்கு நல்ல அபிமானம் உண்டு என்றாலும், அரசியல் ரீதியாக தற்போது எந்த நகர்வையும் அவர் செய்யவில்லை. சசிகலாவுக்குச் சாதகமாக அவர் சிலருடன் பேசுகிறார் என்பது வெறும் கட்டுக்கதைதான்” என்றனர்.

அய்யர் தரப்பு இப்படி மறுப்பு தெரிவித்தாலும், அ.தி.மு.க வட்டாரங்களில் அவர் பற்றிய பேச்சு பரவலாக இருக்கிறது. சமீபத்தில் சசிகலாவுக்கு நெருக்கமான ஒரு தொழிலதிபரிடம் பேசிய ‘பெருமாள்’ பெயர்கொண்ட முன்னாள் அமைச்சர் ஒருவர், “100 சி ரெடி பண்ணி கொடுங்க. நானே 25 எம்.எல்.ஏ-க்கள், 15 மாவட்டச் செயலாளர்களை புடிச்சு கொண்டு வந்துடுறேன். இதுல அய்யர் பேசுனாலும் சின்னம்மாவே பேசுனாலும் காசை இறக்காம ஒருத்தரையும் நம்மால புடிச்சு இழுக்க முடியாது” என்றிருக்கிறார்.

இந்த நிதர்சனம் சசிகலாவுக்கும் புரிகிறது என்கிறார்கள். `தை பிறந்தால் வழி பிறக்குமா?!’ அல்லது இதுவும் புஸ்வானம் ஆகுமா என்பது விரைவில் தெரிந்துவிடும்.



Source link

Leave a Reply

Adsterra
%d bloggers like this: