Adsterra

சதம் விளாசினார் ஸ்ரேயாஸ்: கைவிட்ட இந்திய பவுலர்கள்| Dinamalar

கான்பூர்: கான்பூர் டெஸ்டில் இந்திய பவுலர்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்த, நியூசிலாந்து அணி வலுவான இலக்கை நோக்கி முன்னேறுகிறது. அறிமுக டெஸ்டில் சதம் அடித்தார் ஸ்ரேயாஸ் ஐயர்.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் நடக்கிறது. முதல் நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 258 ரன் எடுத்திருந்தது. 5வது விக்கெட்டுக்கு 113 ரன் சேர்த்த ஸ்ரேயாஸ் (75), ஜடேஜா (50) ஜோடி அவுட்டாகாமல் இருந்தது. இன்று (நவ.,26) இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. நியூசிலாந்தின் சவுத்தீ ‘வேகத்தில்’ மிரட்டினார். இவரிடம் ஜடேஜா (50), சகா (1), ஸ்ரேயாஸ் ஐயர் (105) என வரிசையாக சிக்கினர். அஷ்வின் 38 ரன் எடுத்தார். இந்திய அணி முதல் இன்னிங்சில் 345 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. உமேஷ் யாதவ் (10) அவுட்டாகாமல் இருந்தார்.

latest tamil news

அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு வில்லியம் யங், டாம் லதாம் ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. இஷாந்த் சர்மா, 50வது டெஸ்டில் பங்கேற்கும் உமேஷ் யாதவ் பந்துகளை இருவரும் எளிதாக சமாளித்தனர். அடுத்து வந்த அஷ்வின், ஜடேஜா பந்துகளையும் நிதானமாக எதிர்கொண்டனர். முதல் 18 ஓவர்களில் 38 ரன் மட்டும் எடுத்த போதும், இந்திய பவுலர்களுக்கு தொல்லையாக அமைந்தனர். அஷ்வின், அக்சர் படேல், ஜடேஜா பந்துகளை பவுண்டரிக்கு விரட்டிய யங், இரண்டாவது அரைசதம் எட்டினார்.

latest tamil news

மறுபக்கம் லதாம், 21வது அரைசதம் அடித்தார். இந்த ஜோடியை பிரிக்க ரகானே எடுத்த எந்த முயற்சிக்கும் கடைசி வரை பலன் கிடைக்கவே இல்லை. இரண்டாவது நாள் முடிவில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 129 ரன் எடுத்து, 219 ரன்கள் பின்தங்கி இருந்தது. லதாம் (50), யங் (75) அவுட்டாகாமல் இருந்தனர்.

Advertisement

Source link

Leave a Reply

Adsterra
%d bloggers like this: