Adsterra

கொரோனா சான்றிதழ்: விதிமுறைகள்| Dinamalar

பெங்களூரு:மஹாராஷ்டிராவிலிருந்து கர்நாடகா திரும்பும் பயணியர், கொரோனா பரிசோதனை சான்றிதழ் இல்லாமல் அனுமதிப்பதற்கு கர்நாடக மாநில சுகாதாரத்துறை விதிமுறைகள் வழங்கியுள்ளது.
தொழில் ரீதியான பணிகளுக்கும், மாணவர்கள் படிப்புக்காகவும் கர்நாடகாவிலிருந்து மஹாராஷ்டிராவிற்கு அடிக்கடி பயணம் செய்கின்றனர். இத்தகையோருக்கு கொரோனா பரிசோதனை சான்றிதழ் சமர்பிப்பதிலிருந்து விலக்களிக்க பெங்களூரு தொழிற்சாலை மற்றம் வணிகவியல் குழு சார்பில் மாநில சுகாதாரத்துறைக்கு கடிதம் வைக்கப்பட்டது.
இதன் அடிப்படையில், மஹாராஷ்டிராவிலிருந்து வருவோர் கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டியதில்லை எனவும், மாற்றாக பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவதற்கும் சுற்றறிக்கை விடுத்துள்ளது.
சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கை:மஹாராஷ்டிராவிலிருந்து வரும் பயணியர் கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ்களும் போட்டிருக்க வேண்டும்; கொரோனா பாதிப்பு அறிகுறிகள் இல்லாமல் இருக்க வேண்டும்; அறிகுறிகள் காணப்படும் பயணியர் ஏழு நாட்களக்கு தங்களை தனிமைப்படுத்தி சுயகண்காணிப்புடன், பரிசோதனை செய்ய வேண்டும். பயணியர் முறையான பயணசீட்டு வைத்திருக்க வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Source link

Leave a Reply

Adsterra
%d bloggers like this: