Adsterra

இடிந்து விழும் நிலையில் ஆரம்பச் சுகாதார நிலையம் -விரைவாக புதிய கட்டடம் அமைக்கக் கோரிக்கை! | vandaiyar iruppu village people urges the government to build new primary health center

இந்த நிலையில், தற்போது பெய்து வரும் தொடர் மழையால் கட்டடத்தின் மேல்பகுதியிலிருந்து நீர் ஒழுகிக் கொண்டிருக்கிறது. அதனால், சிகிச்சைக்கு வரும் பொதுமக்கள், பணிபுரியும் மருத்துவர்கள் என அனைவரும் கடும் அவதிக்குள்ளாகினர். இது தொடர்பாக, துணை இயக்குநர் அலுவலகத்துக்கு மீண்டும் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, மருத்துவத்துறை அதிகாரிகள் வாண்டையார் இருப்பு அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்தனர். அதில், கட்டடம் மிக மோசமாக நிலையில், பயன்பாட்டுக்கு உகந்தது இல்லை என்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர்.

அரசு ஆரம்பச் சுகாதார நிலையம் திறக்கப்பட்ட கல்வெட்டு

அரசு ஆரம்பச் சுகாதார நிலையம் திறக்கப்பட்ட கல்வெட்டு

அதைத் தொடர்ந்து, ஆரம்பச் சுகாதார நிலையத்தைக் குறிப்பிட்ட அந்த கட்டடத்துக்குப் பதில் கிராம சேவை மையத்தில் தற்காலிகமாக மாற்றத் தஞ்சாவூர் சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் உத்தரவிட்டார். அதையடுத்து, மருந்து உள்ளிட்ட சில உபகரணங்கள் மட்டும், கிராம சேவை மையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு நோயாளிகளுக்கு அங்கு மருத்துவம் பார்க்கப்பட்டது. கிராம சேவை மையத்தில் சுகாதார நிலையம் இயங்குவதைக் குறிப்பிடும் விதமாக, சிறிய அளவிலான விளம்பரப் பலகையும் அங்கு எழுதி வைக்கப்பட்டது.

Source link

Leave a Reply

Adsterra
%d bloggers like this: