Adsterra

போக்குவரத்து தொழிலாளர்கள் உண்ணாவிரதம் | Dinamalar


புதுச்சேரி : ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே துவங்க வலியுறுத்தி, தமிழக அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

சி.ஐ.டி.யூ., தொழிற்சங்கம் சார்பில் புதுச்சேரி பணிமனை முன் நடந்த உண்ணாவிரதத்திற்கு வேலு தலைமை தாங்கினார். நாராயணசாமி முன்னிலை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி மூர்த்தி, நந்தகோபால், ஜோதிபாஸ், ரகோத்தமன் உள்ளிட்டோர் பேசினர். தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு, ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே துவங்க வேண்டும். போக்குவரத்து கழகத்தின் பற்றாக்குறைகளை ஈடுகட்ட போதிய நிதியை அரசு பட்ஜெட்டில் ஒதுக்கி வழங்க வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டன.

Advertisement



Source link

Leave a Reply

Adsterra
%d bloggers like this: