விவசாய சட்டங்களை எதிர்த்த மனுக்கள் தள்ளுபடியாகின்றன| Dinamalar

புதுடில்லி:’விவசாய சட்டங்களை வாபஸ் பெற, மத்திய அரசு முடிவு செய்து உள்ளதையடுத்து, அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுக்கள் தள்ளுபடியாகும்’ என, சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் பல பொது நல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. இந்த சட்டங்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் அறிவித்ததை யடுத்து, இந்த மனுக்களின் நிலை பற்றி சட்ட வல்லுனர்கள் கூறியதாவது:

இந்த சட்டங்களை வாபஸ் பெறுவதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டு, இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட வேண்டும்.எனினும் மூன்று சட்டங்களையும் திரும்ப பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளதால், அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை வாபஸ் பெற, மனுதாரர்களிடம் நீதிபதிகள் அறிவுறுத்துவர். இல்லாவிடில் மனுக் களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிடும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement

Source link

10 thoughts on “விவசாய சட்டங்களை எதிர்த்த மனுக்கள் தள்ளுபடியாகின்றன| Dinamalar

  1. I thought I was stalking the boy I love, but it turned out that the room was stalking me, I open immediately 🙂

Leave a Reply

%d bloggers like this: