உலகளவில் கொரோனா பாதிப்பு குறைந்தது| Dinamalar

ஜெனீவா :கடந்த வாரம், உலகஅளவில் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறைந்துள்ளதாக, உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

சர்வதேச கொரோனா நிலவரங்கள் குறித்த வாராந்திர அறிக்கையை, உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த ஆகஸ்ட் முதல் உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடந்த வார நிலவரப்படி, உலகளவில் 31 லட்சம் பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது, முந்தைய வாரத்தை விட, 9 சதவீதம் குறைவு.

latest tamil news

ஆப்ரிக்காவில், கொரோனா பாதிப்பு 43 சதவீதம் குறைந்துள்ளது. மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் 20 சதவீதம், அமெரிக்கா மற்றும் மேற்கு பசிபிக் பிராந்தியத்தில் 12 சதவீதம் பாதிப்பு குறைந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Source link

Leave a Reply

%d bloggers like this: